`நில்லுங்க, இத வாசிச்சிட்டு போங்க'- ட்ராஃபிக் விதிமீறல்களை கட்டுப்படுத்த காவலர்களின் புதிய நடவடிக்கை!

`நில்லுங்க, இத வாசிச்சிட்டு போங்க'- ட்ராஃபிக் விதிமீறல்களை கட்டுப்படுத்த காவலர்களின் புதிய நடவடிக்கை!
வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவல்துறையினர்

போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த, விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை ஓரமாக நிற்க வைத்து உறுதிமொழியை ஏற்று அனுப்பும் போக்குவரத்து காவல்துறையினர்.

ஹெல்மெட் அணியாமல் வரக்கூடிய வாகன ஓட்டிகளிடம் இலவசமாக ஹெல்மெட் வழங்குவது, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் எமன் வேடத்தில் நேரில் சென்று பாசக்கயிறு அணிவிப்பது. இவையெல்லாம் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் போக்குவரத்து காவலர்களால் கையாளப்பட்டு வரும் சில வழிமுறைகள்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி வாசிக்கச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விதிகளை மீறிய வாகன ஓட்டிகள், இளைஞர்கள் என அனைவரையும் ஓரமாக நிற்க வைத்து போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடிப்பது குறித்து அறிவுரைகள் அடங்கிய உறுதிமொழியினை வாசிக்கச் செய்து உறுதிமொழி எடுத்து அனுப்புகின்றனர்.

விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் கூறும்போது, "அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள், விதிமீறல்களைக் குறைக்கும் வண்ணம் இத்தகைய நடவடிக்கைகளை மதுரை மாவட்ட போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது. வாகன ஓட்டிகள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என 11 அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்து உறுதிமொழி எடுக்கச் செய்கிறோம்.

இதன் மூலம் சாலை விதிமீறல்கள் குறைந்து, பாதுகாப்பான முறையில் வாகன ஓட்டிகள் பயணம் செய்வார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.