`கூல்டிரிங்ஸ் குடிங்க, தொப்பி அணியுங்கள்'- வாகன ஓட்டிகளை குளிர வைத்த போக்குவரத்து காவல்துறையினர்

கூல்டிரிங்கஸ் வழங்கிய போக்குவரத்து காவல்துறையினர்
கூல்டிரிங்கஸ் வழங்கிய போக்குவரத்து காவல்துறையினர்

போக்குவரத்து விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் தொப்பிகளை வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டனர்.

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம், விரகனூர், விமானநிலையம் செல்லும் சாலையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அருகே மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி மற்றும் காவல்துறையினர் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மட் அணிந்து வருவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை பின்பற்றி முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கோடைக்காலத்தையொட்டி குளிர்பானம் மற்றும் தொப்பிகளை தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறையினர் கொடுத்தனர்.

100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தொப்பி மற்றும் குளிர்பானங்களை காவல்துறையினர் அளித்தனர். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனவும், தலைக்கவசம் அணிவதால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பு தவிர்க்கப்படுவதாகவும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது எனவும் அறிவுரை வழங்கினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in