எகிறிய தக்காளி விலை.. நூதன முறையில் திருடும் வாலிபர்: வைரலாகும் சிசிடிவி காட்சி

எகிறிய தக்காளி விலை.. நூதன முறையில் திருடும் வாலிபர்: வைரலாகும் சிசிடிவி காட்சி

சேலம் மாவட்டத்தில் டூவீலரில் தக்காளி பெட்டியை வாலிபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கிலோ 7 ரூபாய்க்கு விற்றது. இந்த நிலையில் திடீரென தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்று வருகிறது. உணவு தயாரிக்க அத்தியாவசியத் தேவையான தக்காளியின் விலை இந்த அளவிற்கு விற்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் பெருமாகவுண்டன்பட்டி, இளம்பிள்ளை, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளில் இருக்கும் தக்காளி பெட்டிகள் கடந்த ஒரு வாரமாக திருடு போவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், டூவீலரில் தக்காளி பெட்டியை திருடிச் செல்லும் காட்சி அக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in