ஊட்டியில் புலி உலாவல்: அச்சத்தில் மக்கள்

ஊட்டியில் புலி உலாவல்: அச்சத்தில் மக்கள்

ஊட்டி புறநகரில் புலி ஒன்றின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதில், புறநகர் வாழ் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஊட்டியின் இந்திரா நகர் மற்றும் இந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் பகுதிகளில் புலி ஒன்றின் நடமாட்டம் குறித்து கடந்த சில தினங்களாக வனத்துறையின் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோல்ஃப் கோர்ஸ் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடு ஒன்றினை புலி தாக்கி கொன்றது தொடர்பான வீடியோ இன்று(நவ.3) மக்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. வளர்ந்த புலி ஒன்று அதனால் தாக்கப்பட்டு வீழ்ந்திருக்கும் மாட்டின் அருகில் அமர்ந்திருப்பதும், உலவுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இவை தொடர்பாக விசாரிக்க களமிறங்கிய வனத்துறையினர், புலியின் நடமாட்டத்தை முழுமையாக கண்காணிக்க ஏதுவாக கேமராக்களை நிறுவி வருகின்றனர். வனப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வாழும் பகுதியில் நுழைந்த புலியால் அப்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாடு கொல்லப்பட்டது போல மற்றுமொரு அசம்பாவிதம் நிகழுமெனில், புலியை பிடித்து வனப்பகுதியில் சேர்க்கும் நடவடிக்கை பரிசீலிப்போம் என வனத்துறையினர் உறுதி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in