கட்டைவிரல் அகற்றம்: மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட நோயாளி!

கட்டைவிரல் அகற்றம்: மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட நோயாளி!

செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர், கால் விரல்கள் அகற்றப்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்துள்ள நிலையில் பல வருடங்களாக அதற்குச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ராமலிங்கம். இடது கால் கட்டைவிரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு விரல்கள் அகற்றப்பட்டன. இதனால் அவருக்குக் கடுமையான வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், மருத்துவமனை குளியல் அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அதே மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதே மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுபோல் கரோனா காலங்களில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. மறுவாழ்வு கிடைக்க வேண்டிய இடத்தில், மாய்த்து கொள்ளும் சம்பவங்களால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.