தாகம் தீர்த்த ஏஐடியுசி

தாகம் தீர்த்த ஏஐடியுசி

புதுச்சேரி சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீருக்காக மக்கள் தவித்து வந்த நிலையில் அவர்களின் தாகம் தீர்க்க ஏஐடியுசி சார்பில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுச்சேரி காந்தி வீதி, நேரு வீதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் சண்டே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நடைபாதைகள் மற்றும் அங்குள்ள கடைகளின் வெளிப்புறங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளில் மிக குறைந்த விலையில் பல்வேறு பொருட்களும் கிடைக்கும். இதனை புதுவை மற்றும் புதுவையை ஒட்டிய தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கிச் செல்வர்.

அன்றைய தினம் அங்குள்ள அனைத்து பெரிய கடைகளும் மூடப்பட்டு இருப்பதால் அங்கு குடிநீருக்கு மிகப் பெரிய தேவை இருந்து வந்தது. மக்கள் தாகத்தால் தவித்து வந்தனர். இவர்களுக்கு நகராட்சியின் மூலம் இந்த பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு சண்டே மார்க்கெட் சங்கத்தின் சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. இருந்தும் அதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

எனவே, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் முதற்கட்டமாக இன்று காந்தி வீதியில் 6 மையங்களில் கேன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் கே.சேதுசெல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சண்டே மார்க்கெட் சங்க கௌரவ தலைவர் துரை.செல்வம், தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக் மற்றும் சண்டே மார்க்கெட் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .

Related Stories

No stories found.