வீட்டிலிருப்பதோ 3 பல்புதான்... மின் கட்டணமோ ரூ.25,071... `ஷாக்'கான மூதாட்டி

வீட்டிலிருப்பதோ 3 பல்புதான்... மின் கட்டணமோ ரூ.25,071... `ஷாக்'கான மூதாட்டி

வீட்டில் மூன்று பல்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், மின் கட்டணம் ரூ.25,071 செலுத்த வேண்டும் என்று செல்போனில் மேசேஜ் வந்ததை பார்த்து கூடலூர் மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார்.

நீலகிரி மாவட்டம். கூடலூர் அருகே உள்ளது மாதங்களம் கிராமம். இந்த கிராமத்தில் தேவகி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். ஓட்டு வீட்டில் வசித்து வரும் மூதாட்டி 3 பல்புகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் மூதாட்டி தேவகி வீட்டில் இருந்த பழைய மின் மீட்டரை மின்வாரிய ஊழியர்கள் அகற்றிவிட்டு, புதிய மின் மீட்டரை வைத்துள்ளனர். வழக்கம்போல் மின் கட்டணத்திற்கான தொகை அவரது செல்போனுக்கு வந்துள்ளது. இதைப் பார்த்த மூதாட்டி தேவகி அதிர்ச்சி அடைந்தார். காரணம், மின் கட்டணம் ரூ.25,071 செலுத்த வேண்டும் என்பதுதான்.

இதேபோல் அந்த பகுதியில் இருந்த 15க்கும் மேற்பட்ட வீட்டிற்கும் ரூ.15 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியும், அந்த பகுதி மக்களும் இணைந்து, மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் நடத்திய விசாரணையில் மின் கணக்கீட்டாளர் ரமேஷ் நேரிடையாக வீட்டிற்கு சென்று கணக்கீடாமல் தோராயமாக அவராகவே கட்டணத்தை நிர்ணயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷை பணி நீக்கம் செய்து கோட்ட செயற்பொறியாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் கட்டணம் சரி செய்யப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in