பைக்கில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… அலறி அடித்து ஓடிய ஆசிரியர்!

பைக்கில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… அலறி அடித்து ஓடிய ஆசிரியர்!

திருப்பூர் - வஞ்சிபாளையத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு துரையரசன் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை பள்ளி வளாகத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது, வாகனத்தின் முன்புறம் பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து துரையரசன் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவிநாசியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்கள் விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தின் உள்ளே இருந்த 4 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பள்ளி வளாகத்தில் நல்ல பாம்பு பிடிபட்டதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in