ஊருக்குள் புகுந்த 'பாகுபலி' யானை.. விடாது துரத்திய குட்டிநாய்: இரவில் நடந்தது என்ன?

ஊருக்குள் புகுந்த 'பாகுபலி'  யானை.. விடாது துரத்திய குட்டிநாய்: இரவில் நடந்தது என்ன?

ஊருக்குள் புகுந்த 'பாகுபலி' யானையை குட்டிநாய் தடுத்து நிறுத்தி விரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சமயபுரம் பகுதியில், 'பாகுபலி' என்று அழைக்கப்படும் காட்டுயானை, 10 நாட்களாக காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகிறது. அத்துடன் விளைநிலங்களையும் நாசம் செய்து வருகிறது. இந்த நிலையயில் மேட்டுப்பாளையம் அருகே சமயபுரத்தில் இரவு நேரத்தில் சாலையைக் கடந்து 'பாகுபலி' ஊருக்குள் புகுந்தது.

சாலையில் ஆள்மாட்டம் இல்லாத நிலையில் குட்டி நாயொன்று 'பாகுபலி' யானையை ஊருக்குள் விடாமல் குரைத்து தனது எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் யானையும் விடாமல் எதிர்ப்பைக் காட்டியது. ஆனால், பின்வாங்காத குட்டி நாய் விடாமல் யானையோடு மல்லுக்கு நின்றது. குட்டி நாயின் சத்தம் கேட்டு வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள், யானை ஊருக்குள் நுழைந்து விட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். யானையை விரட்ட டார்ச்லைட் அடித்தனர். அந்த நேரத்திலும் யானையை விடாது குட்டி நாய் விரட்டிக் கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஊரை விட்டு 'பாகுபாலி' வெளியேறியது. யானையை நேருக்கு நேர் எதிர் கொண்டு போராடிய குட்டிநாயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in