கோயிலில் பழம், பூ பறித்ததைத் தட்டிக்கேட்ட அர்ச்சகரைத் தாக்கிய மூதாட்டி!

கோயிலில் பழம், பூ பறித்ததைத் தட்டிக்கேட்ட அர்ச்சகரைத் தாக்கிய மூதாட்டி!
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சகர் மற்றும் மூதாட்டி
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சகர் மற்றும் மூதாட்டி

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் - மூதாட்டியிடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, தல்லாகுளம் ஐய்யப்பன் கோயிலில் மூதாட்டி ஒருவர் கோயில் நிர்வாகத்தின் அனுமதி இன்றி கோயில் வளாகத்தில் உள்ள எலுமிச்சை பழங்கள் மற்றும் பூக்களைப் பறித்துள்ளார்.

இதைக்கண்ட, அங்கு பணிபுரியும் அர்ச்சகர் மாரிச்சாமி, மூதாட்டியின் செயலைக் கண்டித்துள்ளார். அப்போது, மூதாட்டியும் அர்ச்சகரை சாதியைக் குறிப்பிட்டு பேசியதால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அருகில் உள்ளவர்கள் மூதாட்டியை வெளியே போகச் சொன்னபோதும் அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மூதாட்டி, அர்ச்சகரைத் தாக்கி உள்ளார். இதனையடுத்து, அருகில் உள்ள பெண்கள் மூதாட்டியை வெளியே அழைத்துச் சென்றனர்.

இந்த வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி கோயிலுக்கு நுழைந்து பழங்களைப் பறித்ததோடு, அதனை தடுத்த அர்ச்சகரையும் தவறுதலாகப் பேசியதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அர்ச்சகர் பேசியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in