மனைவியைக் கடித்த மலைப்பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்த கணவன்!

மனைவியைக் கடித்த மலைப்பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்த கணவன்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அருகே உள்ள மேலதுருவாசபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி அழகு. இவர் வீட்டின் முன்பு அடுக்கி வைத்திருந்த விறகை எடுக்கச் சென்றார். அப்போது வெட்டி வைக்கப்பட்ட பனைமரத்தில் இருந்து வெளியே வந்த மலைப்பாம்பு, அழகுவின் காலில் கடித்து விட்டு மீண்டும் மரத்திற்குள் சென்று விட்டது.
இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாண்டி, பனைமரத்தை உடைத்து அதிலிருந்த மலைப்பாம்பைப் பிடித்தார். டூவீலரில் தனது மனைவி மற்றும் மலைப்பாம்புடன் திருமயம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவரிடம் தன் மனைவியைக் கடித்த பாம்பைக் காட்டினார். இதையடுத்து அழகுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன் பின் திருமயம் வனச்சரக அலுவலகத்திற்குச் சென்ற பாண்டி, மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அவரது செயலை வனத்துறையினர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in