ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் 56 வயதில் திடீர் மரணம்!

மன்னர் என். குமரன் சேதுபதி
மன்னர் என். குமரன் சேதுபதி

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலின் தக்காருமான என்.குமரன் சேதுபதி இன்று மரணமடைந்தார்.

தென் தமிழகத்தின் சேது சீமையை ஆண்டவரும், சேதுபதி மன்னர்களின் இளையவருமான என்.குமரன் சேதுபதி (56) இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். ராமநாதபுரம் அரண்மணையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், ராமேஸ்வரம் திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராகவும், அண்ணாமலை மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகங்களின் செனட் உறுப்பினராகவும் இருந்தார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in