`முதல்வர் எப்போதும் உறுதுணையாக இருப்பார்'- அமைச்சர் சேகர் பாபு

`முதல்வர் எப்போதும் உறுதுணையாக இருப்பார்'- அமைச்சர் சேகர் பாபு

அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறுவதற்கு பள்ளி முதல்வர்களே காரணம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பெருமிதம் தெரிவித்தார்.

சென்னையில் ஒய்எம்சிஏ மெட்ராஸ் மற்றும் ஸ்கூல் வாய்ஸ், அமைப்பு இணைந்து கரோனா காலத்தில், சிறப்பான கல்வி பணி செய்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 350 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர் சேகர் பாபு,

விளிம்பு நிலையில் இருந்து மக்களை உயர்த்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஒழுக்கத்தோடு சாதி மத பேதங்கள் இன்றி வாழ்வதற்கும், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறுவதற்கு பள்ளி முதல்வர்களே காரணமாக உள்ளதாக கூறினார்.

கல்விக்கு முதலிடம் அளிக்கும் தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கல்வியாளர்கள் மேலும் பல மடங்கு உயர்வை அடைய தமிழக முதல்வர் எப்போதும் உறுதுணையாக இருப்பார் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.