விபத்தில் காயமடைந்த போக்குவரத்து ஆய்வாளரை நலம் விசாரித்த முதல்வர்

விபத்தில் காயமடைந்த போக்குவரத்து ஆய்வாளரை நலம் விசாரித்த முதல்வர்
போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன்

அறிவாலயத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, மரம் விழுந்து காயமடைந்த போக்குவரத்து ஆய்வாளரை போனில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார்.

சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், நேற்று(பிப்.17) அசோக்நகர் போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது எதிர்பாராதவிதமாக அறிவாலய வளாகத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.. மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 கார்கள் சேதமடைந்தன.

காயமடைந்த ஆய்வாளர் நாகராஜனை அங்கிருந்த காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு புறநோயாளியாக சிகிச்சைபெற்ற நாகராஜன் 10 நாட்கள் விடுப்பில் சென்றார்.

இந்நிலையில் இன்று காலை ஆய்வாளர் நாகராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்து, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.

மேலும் நாகராஜனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வதாக உறுதியளித்த முதல்வர், அவர் விரைவில் பூர்ண குணமடைந்து பணிக்கு திரும்ப வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இச்சம்பவம், ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் கனிவான இந்த விசாரிப்பு, காவலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.