சென்னையில் அமேசான் நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னையில் அமேசான் நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை பெருங்குடியில் அமேசான் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி துபாய்க்கு அரசு முறை பயணமாக சென்றார். பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர், தமிழகத்திற்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், 4 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு துபாயில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர்.

இதனிடையே, சென்னை பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வேளச்சேரியில் மழை வெள்ளத் தடுப்பு வடிகால் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Related Stories

No stories found.