தாயின் கைப்பிடி தளர்ந்த நேரத்தில் குதித்தோடிய சிறுவன் விபத்தில் பலி!

தாயின் கைப்பிடி தளர்ந்த நேரத்தில் குதித்தோடிய சிறுவன் விபத்தில் பலி!

திருமங்கலம் அருகே, தாயின் கைப்பிடி தளர்ந்த நேரத்தில், குதித்தபடி சாலையைக் கடந்த 3 வயது சிறுவன் வேன் மோதி இறந்துள்ளான்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்திரபாண்டி. இவரது மனைவி பாக்கியலட்சுமி இன்று காலையில் தனது மகனை அழைத்துக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்றில், ஆலம்பட்டியில் உள்ள வங்கிக்குச் சென்றார் பாக்கியலட்சுமி. ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் ஆட்டோவில் இருந்து தன் மகனின் கையை பிடித்தபடி இறங்கிய அவர், டிரைவரிடம் காசு கொடுப்பதற்காக பர்சை திறந்தார்.

அப்போது தாயின் கைப்பிடி தளர்ந்ததால், சுதந்திரமாக குதித்தோடிய சிறுவன் வேகமாக சாலையைக் கடக்க முயன்றான். அது தேசிய நெடுஞ்சாலை என்பதால், வேகமாக வந்த கூரியர் வேன் ஒன்று அவன் மீது மோதியது. பையன் ஓடுகிறானே என்று சுதாரித்துக்கொண்டு தாய் பிடிப்பதற்குள் அவர் கண் முன்னாலேயே அவன் வேன் மோதி இறந்தான். இறந்த மகனை மடியில் போட்டுக்கொண்டு அவர் அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் டிரைவரான மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த மணிமாறனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.