‘மாணவர்களே என்றாலும் குற்றம்தான்’

முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி அமைப்பினர் சிறையில் அடைப்பு
‘மாணவர்களே என்றாலும் குற்றம்தான்’
முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி அமைப்பினர்

தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் உட்பட 35 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கேட்டு, நேற்று ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஹரிகிருஷணன் தலைமையில் மாணவர்கள் உட்பட 35 பேர் சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் எச்சரிக்கையை மீறி மாணவர்கள் அனைவரும் முதல்வர் வீட்டை முற்றுகையிட ஓடினர். பின்னர் போலீசார் துரத்தி சென்று அவர்கள் அனைவரையும் கைது செய்து முத்தையா முதலி தெருவில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

ஏபிவிபி அமைப்பினர்
ஏபிவிபி அமைப்பினர்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 பேர் மீது சட்டவிரோதமாக கலகம் செய்யும் நோக்கத்தோடு கூடுதல், சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சித்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

பின்னர் இரவு கைது செய்த அனைவரையும் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்புரமணியம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் அனைவரும் மாணவர்கள் என கூறியதற்கு துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் இவர்கள் அனைவரும் மாணவர் இல்லை என வாதிட்டார்.

பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். அதில் தேர்தல் விதிமுறை நடைமுறை இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாத சூழலில், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் தடைச்செய்யப்பட்ட இடமான முதல்வர் இல்லத்தை முற்றுகையிடுவது மாணவர்களே என்றாலும் குற்றம் என வாதிட்டார். இதனை ஏற்றுகொண்ட மாஜிஸ்திரேட், அனைவரையும் வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.