வீடு வீடாகத் துண்டுப் பிரசுரம், பால் பாக்கெட்டிலும் விளம்பரம்

களை கட்டுகிறது தடுப்பூசி திருவிழா
ஆவின் பால் பாக்கெட்டில் தடுப்பூசி முகாம் பற்றிய விளம்பரம்
ஆவின் பால் பாக்கெட்டில் தடுப்பூசி முகாம் பற்றிய விளம்பரம்

தமிழ்நாடு முழுவதும் நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப் பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள் என்று அனைத்து இடங்களிலும் சிறப்பு முகாம்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் முகாம் நடைபெறுவது குறித்து தவவல் தெரியாமல், மக்கள் அதனைப் பயன்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பல்வேறு வகையில் விளம்பரமும் செய்யப்படுகின்றன. ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் வீடு வீடாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, மதுரை கிழக்கு ஒன்றியம் யா.கொடிக்குளம், அய்யப்பன்நகர், வௌவால்தோட்டம், மலைச்சாமிபுரம் பகுதியில் யா.கொடிக்குளம் ஊராட்சியில் அதன் தலைவர் எஸ்.திருப்பதி ஏற்பாட்டில் வீடு வீடாகத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

இதேபோல, ஆவின் சார்பில் விற்கப்படுகிற அனைத்து பால் பாக்கெட்களிலும் நாளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தடுப்பூசி போடும் விவரத்தை விளம்பரமாக அச்சிட்டுள்ளது மதுரை ஆவின் நிர்வாகம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in