சீர்காழி மழை வெள்ள பாதிப்பு: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்!

சீர்காழி மழை வெள்ள பாதிப்பு: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மேலும் கடும்மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in