சங்கரன்கோவில் மக்களுக்கு இனிப்பான செய்தி: நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இனி நிற்கும்!

ரயில்
ரயில்hindu கோப்பு படம்

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் இனி சங்கரன்கோவிலில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒவ்வொருவாரமும் வியாழக் கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும். அதேபோல் மிக முக்கிய நகரமான சங்கரன்கோவிலில் இந்த ரயில் நின்றுசெல்ல வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளும், ரயில் பயணிகள் சங்கத்தினரும் தென்னக ரயில்வே பொதுமேலாளருக்குக் கோரிக்கை வைத்துவந்தனர். இதற்கு பலனாக வரும் 2-ம் தேதியில் இருந்து இந்த ரயில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதம்படி, வரும் 2-ம் தேதி, நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், இரவு 9.13 மணிக்கு சங்கரன்கோவில் வந்தடையும். அங்கு 2 நிமிடங்கள் நின்று, 9.15க்கு மீண்டும் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7.30க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45க்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.18க்கு சங்கரன்கோவில் வந்தடையும். அங்கு 2 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் அங்கிருந்து 4.20க்கு புறப்பட்டு 7.45க்கு திருநெல்வேலி வந்தடையும்.

மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் நின்றுசெல்லும் என்னும் அறிவிப்பு சங்கரன்கோவில் மக்களை உற்சாகம் அடையவைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in