3000 தொட்டிச் செடிகள், வெளிநாடு மலர்கள்: கொடைக்கானலில் தொடங்கியது கோடை விழா!

பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்
உருவம் பொறித்த மலர் அமைப்பு
உருவம் பொறித்த மலர் அமைப்பு

கொடைக்கானல், பிரசித்தி பெற்ற கோடை விழா, மலர் கண்காட்சி இன்று தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வருடந்தோறும் கோடை காலத்தில் கோடை விழா நடைபெறும். கொடைக்கானலுக்கென்று சிறப்பாக நடைபெறும் இவ்விழா மலர் கண்காட்சியுடன் தொடங்கி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், படகு போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

அதேபோல், இந்த ஆண்டு மலர் கண்காட்சியுடன் தொடங்கும் கோடை விழா கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவினை காண்பதற்காகவே பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு முதன்முறையாக மலர் கண்காட்சி ஆறு நாட்களுக்கு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற இருக்கிறது. இதில், உருவம் பொறித்த மலர் அமைப்புகள், 25-க்கும் மேலான மலர் வகைகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குகிறது. மேலும் 3000 தொட்டிச் செடிகளும், வெளிநாடு மலர்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக கோடை விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வெகுவாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்கும் கோடை விழா ஜூன் 2-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in