ஏலக்காய், கிராம்புகளால் உருவான ஏர் உழவன், காளைமாடு சிற்பங்கள்: பார்வையாளர்களை கவரும் கண்காட்சி

ஏலக்காய், கிராம்புகளால் உருவான ஏர் உழவன், காளைமாடு சிற்பங்கள்: பார்வையாளர்களை கவரும் கண்காட்சி

கூடலூரில் நடந்த வாசனை திரவிய கண்காட்சியில் 75 கிலோ வாசனை திரவியங்களாலான ஏர் உழவன் காளைமாடு சிற்பம் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கோடைவிழாவையொட்டி 9-வது வாசனை திரவிய கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக இந்த கண்காட்சிகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக தோட்டக்கலை சார்பில், 75 கிலோ வாசனை திரவியங்களாலான ஏர் உழவன், காளைமாடு சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிற்பம் இங்கு வருகை தந்த அனைவரையும் கவர்ந்தது. மேலும், பழங்குடியின பெண் தேயிலை பறிக்கும் சிற்பமும் வாசனை திரவியங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

வனத்துறை சார்பிலும், தோட்டக்கலை சார்பிலும் பல்வேறு அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதனை காண ஏராளமான ஊர்மக்களும், சுற்றுலா பயணிகளும் அரங்குகளில் நிறைந்து காணப்படுகின்றனர். இதைத்தவிர, பிற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், இக்கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.