தாக்குதல்... மீன்கள் பறிமுதல்... நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

தாக்குதல்... மீன்கள் பறிமுதல்... நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கையைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் வழிமறித்து தாக்கி கொள்ளையடிக்கும் தொடர் நிகழ்வுகள் வேதாரண்யம் மீனவர்கள் கடும் வேதனைக்குள்ளாக்கி உள்ளது. இன்று காலை வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 3 படகுகளில் சென்ற மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகளை கிழித்து மீன்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர் இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் கடற்கொள்ளையர்கள்.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கீழத்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (36) என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்ற மணியன் தீவைச் சேர்ந்த சங்கர் (48), குமார் (60) தேத்தாகுடி தெற்கை சேர்ந்த கார்த்திகேயன் (65) ஆகிய மூவரும் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இரண்டு பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசிய 8 நபர்கள், இவர்களின் படகில் ஏறி குமார் மற்றும் கார்த்திகேயனை அடித்து தள்ளி விட்டு படகில் இருந்த மீன்கள், டீசல் கேன், டார்ச் உட்பட பொருள்களை எடுத்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

அதேபோல தோப்புத்துறை, சிவன் வடக்கு வீதியைச் சேர்ந்த காதர் உசேன் (55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுகாட்டுத்துறையிலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்ற, ரமேஷ் (38), நல்லதம்பி (41), காளிதாஸ் (40), அருள்செல்வன் (42) ஆகிய நான்கு பேரையும், ஒரு பைபர் படகில் ஆயுதங்களுடன் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் தாக்கி படகில் இருந்த பேட்டரிகள், போன், 25 கிலோ எடையுள்ள வாளை மீன் வலை ஆகியவற்றை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

அதேபோல தோப்புத்துறை, சிவன் வடக்கு வீதியைச் சேர்ந்த காதர் உசேன் (55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுகாட்டுத்துறை யிலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்ற, ரமேஷ் (38),நல்லதம்பி (41),காளிதாஸ் (40), அருள்செல்வன் (42) ஆகிய நான்கு பேரையும், ஒரு பைபர் படகில் ஆயுதங்களுடன் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் தாக்கி படகில் இருந்த பேட்டரிகள், போன், சுமார் 25 கிலோ எடையுள்ள வாளை மீன் வலை ஆகியவற்றை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

இதேபோல ஆறுகாட்டுத்துறை பனங்காட்டு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (46) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற ஆறுகாட்டுத்துறை ஆறுமுகம், ஜீவன்ஸ் ஆகிய இருவரையும் தாக்கி படகில் இருந்த ஜிபிஎஸ், செல்போன்கள், லைட் உட்பட மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் கரை திரும்பி தங்கள் கிராம பஞ்சாயத்தார்களிடம் தெரிவித்தனர்.

இலங்கை கடற் கொள்ளையர்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் மதிப்புசுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து இலங்கை மீனவர்களாலும் கடற்படையாலும் பாதிக்கப்பட்டு வரும் தங்களுக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ என்று ஏங்குகின்றனர் தமிழக மீனவர்கள்.

Related Stories

No stories found.