சாதனை படைத்த தெற்கு ரயில்வே: எதற்காக தெரியுமா?

சாதனை படைத்த தெற்கு ரயில்வே: எதற்காக தெரியுமா?

கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக மே மாதத்தில் மட்டும் 36.21 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை புரிந்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களுக்கு ரயில்கள் மூலமாக நிலக்கரி கொண்டு செல்வது, மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரயில்கள் மூலம் தமிழகத்தில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதத்தில் மட்டும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தைக் காட்டிலும் 2.63 லட்சம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களுக்கு ரயில்கள் மூலம் வந்து சோ்ந்துள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதல் முறையாக இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 36.21 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டின் மே மாதத்தைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகம். இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு ரயில்வே 68.57 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட இது இது 29 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டில் இதே மாதங்களில் 53.23 மில்லியன் டன் சரக்குகளே கையாளப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிலக்கரி, இரும்பு, சிமென்ட், உணவுப் பொருட்கள், உரம், பெட்ரோலிய பொருட்கள், பெட்டகங்கள் ஆகியவை ரயில் மூலம் கையாளப்பட்ட முக்கிய சரக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in