'ஸார், உங்க தொப்பியை மாட்டிக்கிட்டு பைக்ல போகணும்! ': 4 வயது சிறுவனை நெகிழ வைத்த எஸ்ஐ

'ஸார், உங்க தொப்பியை  மாட்டிக்கிட்டு பைக்ல போகணும்! ':  4 வயது சிறுவனை நெகிழ வைத்த எஸ்ஐ

நான்கு வயது சிறுவனின் ஆசையின்படி தனது தொப்பியை அணிவித்து டூவீலரில் அவனை வைத்து ரவுண்ட் அடித்த காவல்துறை உதவி ஆய்வாளரின் நெகிழ்ச்சியான நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காவல் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரம்ஜான் தொழுகை முடிந்து முஜக்கீர் என்பவர் தனது நான்கு வயது மகன் முபஷீருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜாவிடம் சென்ற முபஷீர், " ஸார், உங்கள் தொப்பியைப் போட்டு பைக்ல ரவுண்ட் போகணும்" என்று கேட்டுள்ளான். இதையடுத்து தனது தொப்பியை சிறுவனுக்கு அணிவித்த உதவி ஆய்வாளர் ராஜா, தனது டூவீலரில் முபாஷீருடன் அழைத்துச் சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.