அனைத்து வங்கிகளிலும் பெண்களுக்கு தனிக்கழிப்பறை

மதுரை எம்.பி கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
அனைத்து வங்கிகளிலும் பெண்களுக்கு தனிக்கழிப்பறை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று அனைத்து வங்கிகள், நிதித்துறை அலுவலகங்களில் பெண்களுக்கு தனிக்கழிப்பறை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி கூறுகையில், ' கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி வங்கி மற்றும் இதர அலுவலகங்களில் பெண்களுக்கு தனிக்கழிப்பறை அமைக்க வேண்டுமென்று மக்களவையில் கோரிக்கை எழுப்பியிருந்தேன். அதற்கு பதில் அளித்து நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களுக்கான தனிக்கழிப்பறை அமைக்க அறிவுறுத்தி சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி, எல்லா பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in