வாகனத்தை நோக்கி வந்த போலீஸ்... ஓட்டம் பிடித்த ஓட்டுநர்... நடந்தது என்ன?

 ரேஷன் அரிசி மூட்டை
ரேஷன் அரிசி மூட்டை

குமரிமாவட்டம், கோடிமுனை பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒருடன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குமரியில் இருந்து கேரளத்துக்கு ரேசன் அரிசி கடத்துவது காலம், காலமாகத் தொடர்ந்துவருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து கேரளத்திற்கு அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும்வகையில் காவல் காவல்துறை சார்பில் 36 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பிலும் பறக்கும்படை அமைக்கப்பட்டு அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும், இதில் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

குளச்சல் காவல் ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையிலான ரோந்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோடிமுனை கடற்கரை கிராமத்தில் ஒரு கார் நின்றது. கேரள பதிவெண் கொண்ட அந்தக் காரைப் பார்த்ததும், காவல்துறையினர் அருகில் சென்றனர். போலீஸார் வாகனத்தை நோக்கி வருவதைப் பார்த்த டிரைவர் காரை விட்டுவிட்டு இறங்கி தப்பியோடிவிட்டார். போலீஸார் காரை சோதனை செய்தபோது அதில் ஒருடன் ரேசன் அரிசி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. நேற்றும் இதேபோல் குழித்துறை பகுதியில் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அந்தவகையில் இருநாள்களில் இரண்டு டன் ரேசன் அரிசி பிடிபட்டுள்ளது.

என்னதான் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் அவ்வப்போது ரேசன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்தினாலும் குமரியில் இருந்து நூதன முறைகளில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்தே வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in