ஆற்றுத் திருவிழா கொண்டாட தடை!

கரோனா பரவலால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
பக்தர்கள்
பக்தர்கள்twitter

தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் ஆற்றுத் திருவிழா கொண்டாட தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதிகளான விழுப்புரம் வட்டத்துக்கு உட்பட்ட பிடாகம், குச்சிபாளையம்; கண்டாச்சிபுரம், வட்டத்துக்கு உட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் இன்று நடைபெற உள்ள ஆற்றுத் திருவிழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து யாரும் ஆற்றுத் திருவிழாவுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவை மீறி பொதுமக்கள் யாரேனும் ஆற்றுத் திருவிழாவுக்கு வந்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in