தஞ்சையில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி

தஞ்சையில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி

தஞ்சையில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாகவும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் சப்பரம் விபத்து குறித்து விவரித்து உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதனையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு களிமேடு கிராமத்திற்கு செல்கிறார். அங்கு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார்.

Related Stories

No stories found.