சம்ஸ்கிருத சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார் மதுரை டீன்!

டீன் ரத்தினவேல்.
டீன் ரத்தினவேல்.

சம்ஸ்கிருத சர்ச்சையால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரத்தினவேல் மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்ஸ்கிருதத்தில் மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டது தொடர்பாக மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை அவர் சந்தித்து சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை குறித்து விளக்கத்தை அளித்தார். அவர் அளித்த விளக்கத்தை ஏற்று மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறுகையில், " கரோனா காலத்தில் ரத்தினவேல், சிறப்பாக பணியாற்றிவர். தவறுக்கு அவர் வருத்தம் தெரிவித்து விட்டதால், முதல்வரின் உத்தரவுப்படி மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார். 'சரக் சபத் உறுதிமொழி' என்பது பிற்காலத்தில் மொழி பிரச்சினை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை, மருத்துவக் கழிவுகளை கையாள்வது மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து அமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in