சென்னை மாநகர பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேச தடை: அரசு முடிவெடுக்க பரிந்துரை

சென்னை மாநகர பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேச தடை: அரசு முடிவெடுக்க பரிந்துரை

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவது, பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை செய்வது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுச்சாமி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், " சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் செல்போன்களில் சத்தமாக பேசுவதாலும், சத்தமாக பாடல்கள் கேட்பதாலும், வீடியோ கேம்கள் விளையாடுவதாலும் சக பயணிகளுக்கு இடையூறாக ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், " கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் ஹெட்போன் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அது போல சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது செல்போன்களில் ஹெட்போன்கள் பயன்படுத்தியே பேசுவதோ அல்லது பாடல் கேட்பது மற்றும் வீடியோ கேம்கள் விளையாடுவது உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் " என்று மனுவில் வலியுறுத்தியிருந்தார்.. அத்துடன் மாநகர பேருந்தில் பயணிக்கும் போது சத்தமாக செல்போனில் பேசுவது, பாடல் கேட்பது,கேம் விளையாடுவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர், தமிழக அரசின் போக்குவரத்து கூடுதல் செயலாளருக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சமூக ஆர்வலர் மனுவில் குறிப்பிட்ட விவகாரத்தை ஆய்வு மேற்கொண்டதாகவும், இதுதொடர்பாக அரசு முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த பரிந்துரை கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் போக்குவரத்து கூடுதல் செயலாளருக்கு அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in