மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. செய்முறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. செய்முறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இன்று தொடங்க இருந்த செய்முறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தின்கீழ் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகள் உள்ளன. இதுபோக, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. நவம்பர் 2021-ம் ஆண்டுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று 6-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதி வரை நடப்பதாக இருந்தது.

தமிழக அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்படி கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டதால், இன்று தொடங்குவதாக இருந்த செய்முறைத் தேர்வுகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த தகவலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சுருளியாண்டி, அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் மின்னஞ்சல் வழியே அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.