ஓடும் ரயிலில் துப்பாக்கியை தவறவிட்ட பொன்.மாணிக்கவேல்!

ஓடும் ரயிலில் துப்பாக்கியை தவறவிட்ட பொன்.மாணிக்கவேல்!

ஓடும் ரயிலில் துப்பாக்கியை தவறவிட்டுள்ளார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல்.

சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி பொன்.மாணிக்கவேல் ஈரோடு வந்தார். அப்போது அவர் பயணம் செய்த பெட்டியான HA1-ல் தனது கைத் துப்பாக்கியை தவறிவிட்டார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு இருப்பு பாதை காவல் துறையினர் துப்பாக்கியை மீட்டு பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைத்தனர். பொன்.மாணிக்கவேலு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in