மணமகளுக்கு பெட்ரோல், மணமகனுக்கு டீசல்: வித்தியாசமாக பரிசு வழங்கிய நண்பர்கள்

மணமகளுக்கு பெட்ரோல், மணமகனுக்கு டீசல்: வித்தியாசமாக பரிசு வழங்கிய நண்பர்கள்

திருமண நிகழ்ச்சியில் மணமகன், மணமகளுக்கு பெட்ரோல், டீசலை பரிசாக கொடுத்துள்ளனர் நண்பர்கள். இந்த ருசிகர சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. 130 நாட்களுக்கு மேலாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிவுக்கு பிறகு அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு. முன்பு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 10 காசு முதல் 30 காசுகள் வரைதான் உயர்த்தப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வுக்கே வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்ந்தது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டலுக்கு 75 காசுகள் வரை தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதோடு நின்றுவிடாமல், சமையல் எரிவாயு விலையும் ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு திருமணம் செய்துக் கொள்ளும் புதுமண தம்பதிகளையும் பாதித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வந்த மணமகனின் நண்பர்கள் வித்தியாசமாக பரிசு ஒன்றை கொடுத்தனர். அதன்படி, மணப்பெண்ணுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், மணமகனுக்கு ஒரு லிட்டர் டீசலும் பரிசாக வழங்கினர். பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவதால் அதனை பரிசாக வழங்கியதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in