புன்னகை புகழ் வேலம்மாள் பாட்டிக்கு முதியோர் ஓய்வூதிய ஆணை

வேலம்மாள் பாட்டி
வேலம்மாள் பாட்டி

தன் புன்னகையால் பெரிய அளவில் வைரல் ஆன நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையினை, குமரிமாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று வழங்கினார்.

முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கும் ஆட்சியர் அரவிந்த்
முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கும் ஆட்சியர் அரவிந்த்

குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. கரோனா நேரத்தில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணமாக வழங்கியது. அதை முகம் ததும்ப புன்னகையுடன் வாங்கிச் சென்ற வேலம்மாள் பாட்டியை, நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி புகைப்படம் எடுத்திருந்தார். இந்தப்படம் பெரிய அளவில் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இந்தப்படத்தை ‘இந்த சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு’ என்னும் பெயரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தன் சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்களிலும் விளப்படப் படங்களில் வேலம்மாள் பாட்டியின் புன்னகை ததும்பும் முகமும் இடம்பெற்றது. இந்நிலையில் வேலம்மாள் பாட்டி அடிப்படையில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றவர். அவரை முறையாகக் கவனித்துக்கொள்ளவும் யாரும் இல்லை என்பது புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பியின் மூலம், மாவட்ட ஆட்சியர் அரவிந்திற்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வருவாய்த்துறையினரின் பரிசீலனைக்குப் பின்பு மாவட்ட ஆட்சியர் அரவிந்த், வேலம்மாள் பாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். அதன்பின்பு, வேலம்மாள் தனக்கே உரிய புன்னகையை உதிர்த்து முதல்வருக்கும், ஆட்சியருக்கும், என்னை புகைப்படம் எடுத்த ஜாக்சன் ஹெர்பிக்கும் நன்றி என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in