வேலை தேடுபவர்களுக்கு `பாலம்' திட்டம் தொடக்கம்

வேலை தேடுபவர்களுக்கு `பாலம்' திட்டம் தொடக்கம்
பாலம் திட்ட தொடக்க விழா

படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்கும் வகையில் பாலம் என்ற திட்டம் கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்துறையின் கீழ் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் பாலம் திட்ட தொடக்கவிழா கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் நகர வாழ்வாதார மைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பாலம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "வேலை தேடும் நபர்களுக்கும், வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ஒரு இணைப்பு முகமாக மாவட்டநிர்வாகம் இருந்து அனைவருக்கும் தகுதிக்கேற்ப தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும் திட்டம்தான் பாலம். தமிழகத்திலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு தகுதியான வேலை, அனைவருக்கும் இல்லம் என்பதே எனது அரசியல் வாழ்வின் லட்சியம். இந்நாள் என் அரசியல் வாழ்வின் பொன்னாள். அனைவருக்கும் வீடு என்பதையும் சிறிய அளவில் தொடங்கி உள்ளேன்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in