குற்றவாளிகள் இனி தப்ப முடியாது: தயாராகிறது மூன்றாவது `கண்'

குற்றவாளிகள் இனி தப்ப முடியாது: தயாராகிறது மூன்றாவது `கண்'

சென்னையில் பழுதடைந்த சிசிடிவி கேமராவை சீர் செய்ய அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.1.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்ற செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய காவல்துறைக்கு மூன்றாம் கண்ணாக சிசிடிவி கேமராகள் செயல்பட்டு வருகின்றது. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சென்னையின் முக்கிய இடங்களில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் காவல்துறையால் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலமாக பல குற்ற வழக்குகள் எளிதாக கண்டுபிடிக்கபட்டு விரைந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமராக்களால் சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் அமைத்த பின்னர் சென்னை பாதுகாப்பான நகரமாக திகழ்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்துகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதாகவும், இதனால் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீர் செய்ய காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த நிதி ஆண்டில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்புக்காக 1.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகையை ஐந்து மண்டலங்களில் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீர் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டலத்தில் 3856 சிசிடிவி கேமராக்களும், மேற்கு மண்டலத்தில் 639 சிசிடிவி கேமராக்களும், தெற்கு மண்டலத்தில் 4817 சிசிடிவி கேமராக்களும், வடக்கு மண்டலத்தில் 1815 கேமராக்களும், போக்குவரத்து மண்டலத்தில் 1228 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 12355 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் அவற்றை சீர்செய்ய வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கும் பணியினை விரைந்து முடிக்கவும், பழுது நீக்க பணிகள் முடிந்தவுடன் அனைத்து கேமராக்களும் நல்ல முறையில் செயல்படுகின்றதா? என்பதை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in