அண்ணாமலையின் முதல் பிரச்சாரம்... டெபாசிட் இழந்த நீலகிரி பாஜக

முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

நீலகிரி மாவட்டத்தில் பாஜக போட்டியிட்ட 113 வார்டுகளில் 82 வார்டுகளில் வைப்பு தொகையை இழந்தது. பேரூராட்சிகளில் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டுகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் 183 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதன்முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்து குன்னூரில் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரம் செய்த குன்னூர் நகராட்சி உட்பட உதகை, கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளில் பாஜக முழுமையாக தோல்வியடைந்தது.

உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் பாஜக 15 வார்டுகளில் போட்டியிட்டு, அனைத்து வார்டுகளிலும் வைப்பு தொகையை இழந்தது. குன்னூர் நகராட்சியில் 10 வார்டுகளில் போட்டியிட்டு 5 வார்டுகளில் வைப்புத் தொகையை இழந்தது. கூடலூர் நகராட்சியில் 9 வார்டுகளில் போட்டியிட்டு 8 வார்டுகளில் வைத்துத் தொகையை இழந்தது. நெல்லியாளம் நகராட்சியில் 6 வார்டுகளில் போட்டியிட்டு 4 வார்டுகளில் வைப்புத் தொகையை இழந்தது. மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளிலும் பாஜக தோல்வியடைந்தது. மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் பாஜக 74 வார்டுகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. 50 இடங்களில் வைப்புத்தொகையை இழந்தது.

அதிகரட்டி 1-ம் வார்டு, கீழ்குந்தா 6வது வார்டு, கோத்தகிரி 3வது வார்டு, பிக்கட்டி 12 மற்றும் 13 ஆகிய 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிகரட்டியில் 8 வார்டுகளில் போட்டியிட்டு 3 வார்டுகளில் வைப்புத்தொகையை இழந்தது. உலிக்கல்லில் 3 வார்டுகளில் போட்டியிட்டு மூன்றிலும் வைப்புத் தொகையை இழந்தது. ஓவேலி பேரூராட்சியில் 4 வார்டுகளில் போட்டியிட்டு 4 வார்டுகளிலும் வைப்புத் தொகையை இழந்தது. கீழ்குந்தா பேரூராட்சியில் 6 வார்டுகளில் போட்டியிட்டு 4 வார்டுகளில் வைப்புத் தொகையை இழந்தது. கேத்தி பேரூராட்சியில் 11 வார்டுகளில் போட்டியிட்டு, 8 வார்டுகளில் வைப்புத் தொகையை இழந்தது. கோத்தகிரி பேரூராட்சியில் 10 வார்டுகளில் போட்டியிட்டு 9 வார்டுகளில் வைப்புத் தொகையை இழந்தது.

சோலூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் போட்டியிட்டு 6 வார்டுகளில் வைப்புத்தொகையை இழந்தது. தேவர்சோலையில் 4 வார்டுகளில் போட்டியிட்டு ஒரு வார்டில் வைப்புத்தொகையை இழந்தது. நடுவட்டத்தில் 7வது வார்டில் போட்டியிட்டு வைப்புத்தொகையை இழந்தது. பிக்கட்டி பேரூராட்சியில் 11 வார்டுகளில் போட்டியிட்டு 4 வார்டுகளில் வைப்புத் தொகையை இழந்தது. ஜெகதளா பேரூராட்சியில் 8 வார்டுகளில் போட்டியிட்டு 7 வார்டுகளில் வைப்புத்தொகையை இழந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in