மீண்டும் வேலை வேண்டும்: ஆட்சியரிடம் முறையிட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்கள்

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த முன்னாள் பணியாளர்கள்
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த முன்னாள் பணியாளர்கள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் நிர்வாகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள் என 136 தொகுப்பூதிய பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி நிதி நெருக்கடியை காரணம் காட்டி பல்கலைக்கழக நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பாக பணி நீக்கம் செய்தது. இதனால், அப்பணியாளர்களும், குடும்ப உறுப்பினர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் தர்ணா, உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டும் எவ்வித பயனும் இல்லை. இந்த 136 பணியாளர்களும், அவர்களது பணிக்கு ஏற்ற கல்வித்தகுதியுடன் பணியாற்றி வந்த நிலையில், நிதிநெருக்கடியை மட்டும் காரணம் காட்டி பணிநீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை சந்தித்து இன்று கோரிக்கை மனுவினை அளித்தனர். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் தங்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற்று பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in