சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான குழந்தை: 30 நிமிடத்தில் மீட்டது போலீஸ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான குழந்தை: 30 நிமிடத்தில் மீட்டது போலீஸ்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தை 30 நிமிடத்தில் ரயில்வே காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த வினோத்குமார்- லதா தம்பதிக்கு ஒன்றரை வயதில் ருத்விக் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் வினோத் குடும்பத்துடன் திருப்பதி சென்று தனது மகனுக்கு மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்திவிட்டு சென்னை திரும்பினர். மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக, இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் திடீரென ஒன்றரை வயது மகன் ருத்விக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் குழந்தை காணாமல் போனது குறித்து தெரிவித்துள்ளனர்.

போலீஸார் உடனே ரயில் நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை மீட்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிதவறி சென்ற குழந்தையை 30 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 7.25 மணிக்கு புறப்பட்ட ஜனசதாப்தி விரைவு ரயிலில் அவர்களை விசாகப்பட்டினத்திற்கு ரயில்வே போலீஸார் அனுப்பி வைத்தனர். காணாமல் போன குழந்தையை 30 நிமிடத்தில் மீட்டு கொடுத்த போலீஸாருக்கு வினோத்குமார்- லதா தம்பதி தனது நன்றியை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in