கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை வருகிறது மெட்ரோ ரயில்!

ரூ.12,669 கோடி செலவில் அமைக்கப்படுகிறது
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை வருகிறது மெட்ரோ ரயில்!

சென்னையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. அண்மையில் நடந்த பொது வேலை நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மெட்ரோ ரயில்தான் உதவியது. விம்கோ நகரில் இருந்து வண்ணாரப்பேட்டை, சென்னை சென்ட்ரல், அண்ணாசாலை, கிண்டி, அண்ணாநகர், விமான நிலையம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் நடுத்தர மற்றும் வசதியான மக்கள் பயன் அடைந்த வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை 2-வது வழித்தடத்தின் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 26.8 கிமீ நீளம் இந்த புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 10.3 கிமீ நீளமுள்ள வழித்தடத்தில் 9 நிலையங்கள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட உள்ளது.

இந்தப் மெட்ரோ வழித்தட கட்டுமானப் பணிகளின்போது வெளியேற்றப்படும் கழிவுகளை பத்திரமாக அகற்றும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 133 மரங்கள் அகற்றப்பட உள்ள நிலையில் அதனை ஈடுகட்டுவதற்காக 12 மடங்கு அதிகமாக அதாவது 1,596 மரங்கள் நடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.12,669 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தில் ரூ.22.33 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக மட்டுமே செலவிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in