`அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சாலையில் நடமாட முடியாது'- மன்னார்குடி ஜீயர் மிரட்டல்

மதுரை ஆதீனத்துடன்  களிமேடு வந்திருந்த மன்னார்குடி ஜீயர், மற்றும் ராம.ரவிக்குமார்
மதுரை ஆதீனத்துடன் களிமேடு வந்திருந்த மன்னார்குடி ஜீயர், மற்றும் ராம.ரவிக்குமார்

``இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது'' என மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மிரட்டல் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த இடத்தை, மதுரை ஆதீனத்துடன் இணைந்து இன்று மாலை பார்வையிட்ட மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில். ``பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை எந்த அரசுக்கும் கிடையாது. எந்த இயக்கத்துக்கும் கிடையாது. பட்டினப் பிரவேசம் நிச்சயம் நடக்கும், அதை தடுக்க முடியாது.

இந்து தருமத்துக்கு எதிரான துரோகிகளை தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது. ஆளுங்கட்சியினர் சாதி, மத, பேதம் இல்லை என கூறுகிறார்கள். கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரையில், எங்களால் தான் அரசு உள்ளது. அரசை நாங்கள் தான் நடத்துகிறோம் என கூறி வந்தார். அவரை கைது செய்ய முடியவில்லை. இந்துக்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்பட வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in