
ரயில் பயணச்சீட்டு வழங்கும் தானியங்கி இயந்திரங்களில் க்யூஆர்கோட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் நடைமுறையை மதுரை கோட்ட ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இதன் மூலம் ரயில்வே சீசன் டிக்கெட்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டுகளிலும் பணப்பற்று செய்துகொள்ளலாம். பயணச்சீட்டு இயந்திரங்களில் பயண விவரங்களைப் பதிந்தவுடன், பணம் செலுத்தும் முறைகளான ஸ்மார்ட் கார்டு மற்றும் இரண்டு க்யூ ஆர் கோட் பட்டியல் திரையில் தோன்றும். திரையில் கண்ட இரண்டு க்யூ ஆர் கோட்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தவுடன், க்யூ ஆர் கோட் திரையில் தோன்றும். அதை அலைபேசியில் உள்ள ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி கொண்ட பண பரிமாற்றம் செயலிகள் வாயிலாக ஸ்கேன் செய்து மின்னணு பணப் பரிமாற்றம் செய்யலாம். கட்டணத் தொகையைச் செலுத்தியவுடன் இயந்திரத்திலிருந்து பயணச்சீட்டு வெளியே வரும்.