பேரறிவாளன் விடுதலை: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய மதுரை வழக்கறிஞர்கள்!

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்கள்
கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்கள்

பேரறிவாளனின் விடுதலையை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர் மதுரை வழக்கறிஞர்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது விதியை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதைத் தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களும் அரசியல் கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மதுரை வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடினர்.

மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் வழக்கறிஞர்கள் கனகவேல், ராஜேந்திரன், நாகலிங்கம் உள்ளிட்ட பலரும் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று உரையாற்றினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in