காதலும், இனக்கவர்ச்சியும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: உயர் நீதிமன்றம்

காதலும், இனக்கவர்ச்சியும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: உயர் நீதிமன்றம்

ஊரடங்கில் மின்னணு சாதனத்தில் மூழ்கிய குழந்தைகள் கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையேயான வித்தியாசம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் 15 வயது சிறுவன் ஒருவன் 17 வயது சிறுமியை காதல் விவகாரம் குறித்த வழக்கில் கீழமை நீதிமன்றம், சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சிறுவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறுவனின் வாக்குமூலம் அடிப்படையில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடக்கும் நிகழ்வு மீண்டும் நடக்காத வகையில் நடவடிக்கை தேவை என்றும் பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது.

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய டிஜிபியின் பதிவு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது என்று கூறிய உயர் நீதிமன்றம், ஊரடங்கில் மின்னணு சாதனத்தில் மூழ்கிய குழந்தைகள் கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையேயான வித்தியாசம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in