இடிந்து விழுந்த மேம்பாலத்தால் பறிபோன உயிர்: கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்!

இடிந்து விழுந்த மேம்பாலத்தால் பறிபோன உயிர்:
கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்!

மதுரை மேம்பாலம் கட்டும் போது வடமாநில தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக ஜேஎம்சி நிறுவனத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ. 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மதுரை - செட்டிக்குளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.980 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2021 ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை பாலத்தில் வேலை நடந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆகாஷ் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஜேஎம்சி கட்டுமான நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது இயந்திரங்களைப் பாதுகாப்பு இல்லாமல் பயன்படுத்தியது. விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமையில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்துக்கு ரூ.40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பால பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in