சிறுநீரக செயலிழப்புக்கு கூறும் 2 காரணங்கள்

சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் முதல்வர் வனிதா தகவல்
சிறுநீரக செயலிழப்புக்கு கூறும் 2 காரணங்கள்
கலந்துரையாடல் கூட்டத்தில் பேசும் முதல்வர் வனிதா

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக சிறுநீரக தினம் மார்ச் 10-ல் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை ஆகியவற்றின் சிறுநீரகவியல் துறை சார்பில் மருத்துவமனை முதல்வர் வனிதா தலைமையில் இன்று சிறுநீரக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் வனிதா பேசுகையில், ``உலக சிறுநீரக தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கான அறிவை ஊக்கப்படுத்துதல் என்பதாகும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை கட்டுக்குள் இல்லாத காரணத்தினால் பத்து பேரில் ஒருவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்களுடைய ரத்தத்தில் உள்ள உப்பு மற்றும் கிரியாட்டினின் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்

நாள் ஒன்றுக்கு 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும், அதே போல உணவில் ஒரு நாளைக்கு 6 மிலி கிராம் அளவுக்கு மேல் உப்பு சேர்க்கக்கூடாது. தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும், துரித உணவுகள் மற்றும் டின்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றின் மூலமாக சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்த முடியும்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுநீரகம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அறிந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in