மகனை அரசுப்பள்ளியில் சேர்த்த குமரி எஸ்.பி

மகனை அரசுப்பள்ளியில் சேர்த்த குமரி எஸ்.பி
ஹரிகிரண் பிரசாத்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தனது 5 வயது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார்.

கன்னியாகுமரிமாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் கோவைக்கு மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் சென்னை தி நகர் துணை கமிஷனராக இருந்த ஹரிகிரண் பிரசாத் புதிய கண்காணிப்பாளராக அண்மையில் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்ற போதே தன் தாய், தந்தையருக்கு முதல் சல்யூட் அடித்த உருக்கமான காட்சியும் நடந்தது.

இந்நிலையில் ஹரிகிரண் பிரசாத் தனது 5 வயது மகன் நிஸ்ரிக்கை நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு சேர்த்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஹரிகிரண் பிரசாத் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்திருப்பது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.