மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு!

மதுரை காமராஜர் பல்கலை
துணைவேந்தர் பொறுப்பேற்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஜெ.குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த மு.கிருஷ்ணன் கடந்த ஜூன் மாதம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக இடம் மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், அண்ணா பல்கலைக்கழக கிரிஸ்டல் வளர்ச்சி மையத்தலைவருமான பேராசிரியர் ஜெ.குமார் மார்ச் 29-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று காலை அவர் துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in