தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!

வானிலை மையம் அறிவிப்பு
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நாளை, நாளை மறுநாள் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in